அரசு நிகழ்ச்சியில் மது பயன்படுத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்! பாஸ் வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 06 Oct, 2025
அக்தோபர் 6,
சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Tiong King Sing பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு மது வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார். அந்த அரசு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் ஹலால் முறையைப் பின்பற்றாமல் அரசு நிகழ்ச்சி நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.
சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் நிகழ்ச்சியில் மது வழங்கப்பட்டதை நியாயப்படுத்துகிறார். இப்படியான அமைச்சரை அன்வார் தனது அமைச்சரவையில் வைத்திருக்க வேண்டிய என்ன அவசியம் ஏற்பட்டது என Ahmad Fadhli Shaari கேள்வி எழுப்பினார். சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Tiong King Sing இதற்கு முன்னமே இஸ்லாமிய நெறிகளை மீறியிருக்கிறார். இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் அல்ல என்றும் இதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் அமைதியாக இருந்து சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Tiong King Sing-க்கு ஆதரவளிப்பதாகப் பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் Ahmad Fadhli Shaari சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



