முன்னாள் அதிகாரியை வேலையிலிருந்து நீக்கியதே போதுமானது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 14-

தமது தொகுதிக்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கூறப்பட்டதைக் கண்டறிந்த பின்னர், தமது முன்னாள் அதிகாரி குறித்து மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் செய்வதில்லை என்ற தமது முடிவை, ஜசெகவின் திரேசா கோக் தற்காத்துள்ளார்.
இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதேன் என்று. மசீசவின் முன்னாள் உதவித் தலைவர் தி லியான் கெர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து திரேசா இவ்வாறு கூறியுள்ளார்.

திரேசா “நேர்மை, நம்பகத்தன்மை, பொறுப்பு, சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம்" ஆகியவற்றில் உறுதியாக இருக்கின்றார் என்ற, ஜசெக மூத்த தலைவர் தலைவர் லிம் கிட் சியாங்கின் கூற்றையும் தி கேள்வி

எழுப்பியிருந்தார்.“இந்த விவகாரம் குறித்து திரேசா எம்ஏசிசியிடம் புகார் செய்திருக்கவில்லை என்றும் அவரின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு அவர் பொறுப்பளியல்ல என்றும் நான் நம்புகிறேன்" என்று கிட் சியாங் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

ஓர் உதவி அதிகாரியினால் தொகுதிக்காக நிதி, முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து புகார் செய்ய ஒருவர் தவறினால், அவர் எப்படி நேர்மையான, சிறந்த நிவாகியாக மற்றும் ஜனநாயகவாதியாக இருக்க முடியும் என்று தி கேள்வி எழுப்பினார்.
“இது மூடிமறைப்பதற்கு சமமானது இல்லையா?" என்று கேள்வி எழுப்பிய தி, நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து நீண்ட காலமாக பேசிவருவதால், ஜசெக சொல்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

“இவ்விரு கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் ஜசெக கடந்த காலங்களில் வாக்காளர்களைக் கவர்ந்து வந்தது. தாங்கள் பேசியதுபோல் நடந்து கொள்ள ஜசெகவுக்கு இதுவே சரியான நேரம். எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் (ஜசெகவினர்) இப்படித்தான் கோரியிருப்பார்கள்" என்று தி கூறினார்.

Ahli Parlimen DAP, Teresa Kok, mempertahankan keputusannya untuk tidak melaporkan bekas pegawainya kepada SPRM selepas mendapati penyelewengan dana kawasan berlaku. Bekas Timbalan Pengerusi MCA, Tee Lian Ker, mempersoalkan tindakan itu, mendakwa ia bercanggah dengan prinsip ketelusan dan akauntabiliti DAP.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *