சிகாமட்டில் நிலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கும் நிலநடுக்கத்திற்கும் தொடர்பு இருப்பது உறுதியாகவில்லை!

top-news
FREE WEBSITE AD

சிகாமட், செப். 3-

ஜொகூரின் சிகாமட் மாவட்டத்தின் சில இடங்களில் காணப்படும் நில விரிசல்களுக்கும் அங்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை, மாநில கனிம மற்றும் புவிஅறிவியல் இலாகா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மிகவும் இறுகிய நிலப் பகுதிகளில் இல்லாமல் மிகவும் மிருதுவான நிலப் பகுதிகளில் மட்டுமே விரிசல்கள் ஏற்பட்டிருப்பதைக் காணும்போது, அவை நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக, அவ்விலாகாவின் இயக்குநர் நோராஸ்ஹார் நிகாதிமின் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பல தடவை நிகழ்ந்திருக்கும் மிதமான நிலநடுக்கத்தினால் நிலத்தின் மேல் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாகத் தொடர்புப்படுத்தப்படும் ஓரிடத்திற்குச் சென்று அவ்விலாகாவைச் சேர்ந்த ஊழியர்கள் ஆய்வு நடத்தினர்.

சிகாமட் மாவட்டத்தின் சில இடங்களில் இதுவரையில் ஆறு முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆகக் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி. ரிக்டர் அளவைக் கருவியில் 2.7ஆகப் பதிவான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *