ஊழலுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகவும் முழுமையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் பாஹ்மி

top-news

கோலாலம்பூர், ஜன. 19-

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அலட்சியமாக அல்லாது, முழுமையாகவும் உறுதியாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்தை தொடர்பு பல்லூடக அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் அமர்வின் முதல் கூட்டத்தொடரின் தொடக்க விழாவில் உரையாற்றிய மன்னரின் அரச உரையில், நல்லாட்சி (Good Governance) மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், எந்தவிதமான ஊழல் சம்பவங்களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த அரச உரை அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் ஒரு கடுமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது என்றார்.

“ஊழலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல, முன்பு ஈடுபட்டவர்களுக்கும் இந்த அரச உரை ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை,  மாநிலங்களவை உறுப்பினர்கள், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்நின்று செயல்பட்டு, சமூகத்திற்கு நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *