மின்சார வாரியத்தில் (TNB) RM 5 பில்லியன் இழப்பு! – துணைப் பிரதமர் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 27,

தேசிய மின்சார வாரியமான TNB நிறுவனம் மிக பெரிய அளவில் இழைப்பைச் சந்தித்திருப்பதாகத் துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத cryptocurrency பயன்பாடுகள் மின்சாரச் சாதனங்கள் திருட்டு, சட்டவிரோத மின்சாரப் பயன்பாடுகள் என முக்கிய காரணங்களால் தேசிய மின்சார வாரியமான TNB கடந்த 2020 முதல் 2025 வரையில் RM 5.14 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்திருப்பதாகத் துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார். 

கடந்த 5 ஆண்டுகளில் 14,489 வளாகங்களில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அமைச்சு கண்டறிந்த நிலையில் இதுவரையில் 77 விசாரணை குற்றப் பத்திரிக்கைகளை அமைச்சு விசாரித்து வருவதாக Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார். சோதனையில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதும் 14,489 வளாகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார். தேசிய மின்சார வாரியமான TNB கட்டணங்களைச் சட்டவிரோத cryptocurrency மூலமாகச் செலுத்துவதைத் தவிர்க்க அமைச்சு தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எரிசக்தி மாற்று, நீர் மேலான்மை அமைச்சருமான Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *