TNB மின் நிலையம் வெடித்ததில் இருவர் படுகாயம்! – மலாக்கா!
- Thinagaren Sanggaren
- 22 Jul, 2025
ஜூலை 22,
TNB மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறைப் பழுதுபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்மந்தப்பட்ட இரு பணியாளர்களும் படுகாயம் அடைந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் மலாக்காவின் Jalan Bachang உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறை ஆய்வு செய்வதற்காக இரு பணியாளர்கள் மின் நிலையத்தை நெருங்கிய போது மின் நிலையம் வெடித்ததாக மத்திய மலாக்கா தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Ismail Harun தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து
அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 9 பேர் கொண்ட மீட்புக் குழுவுடன் விரைந்ததாக
Ismail Harun தெரிவித்தார்.
மின் நிலைய வெடிப்பால் பாதிக்கப்பட்ட இருவரும் 30 வயதுள்ள TNB ஊழியர்கள் என அடையாளம்
காணப்பட்டிருப்பதாகவும் உடலின் பல்வேறு பகுதிகளில் தீ காயம் ஏற்பட்டதால் அவசரச் சிகிச்சைக்காக
மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சம்பவம் குறித்து காவல்துறையினர்
மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய
மலாக்கா தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Ismail
Harun தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



