தேர்தல் நிதி குற்றச்சாட்டுக்கு இடையில் பெரிக்காத்தானில் பாஸ் தொடர்ந்து நீடித்திருக்கும்!
- Muthu Kumar
- 20 Sep, 2025
கோலாலம்பூர், செப். 20-
தேர்தல் நிதி விவகாரம் தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனலில் புகைச்சல் ஏற்பட்டிருந்தாலும், எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி தொடர்ந்து பெர்சத்துவுடன் ஒத்துழைக்கும் என்று அக்கட்சி தீர்க்கமாகக் கூறியிருக்கிறது.
பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து உறுப்புக் கட்சிகளும் அவசியம் மதிக்க வேண்டும் என்று, பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட் தெரிவித்தார்."நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலை சந்திப்பதற்காக, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக்
கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதென்ற தனது முடிவில் பாஸ் தீர்க்கமாகவும் இருக்கிறது.
“பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை பலப்படுத்துவதோடு, மக்கள் மற்றும் நாட்டின்
நலன்களுக்காகப் போராடுவதற்கான முக்கிய வலிமையான தளமாக ஒற்றுமை விளங்குகிறது" என்று இட்ரிஸ் தெரிவித்தார்.தங்களின் அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெரிக்காத்தான் அவசியம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம்,13 வயதுடைய ஸாரா கைரினா என்ற மாணவியின் மரணம், ரோன்95 உதவித் தொகையின் தாக்கம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களின் வாழ்க்கைச் செலவினம் உட்பட பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.இவற்றில் “நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தை நிராகரியுங்கள்” என்பது தொடர்பிலான மாபெரும் பேரணியை வரும் அக்டோபர் 4ஆம் தேதி பாஸ் ஏற்பாடு செய்ய விருப்பதையும் இட்ரிஸ் நேற்று அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



