சபா தேர்தலில் போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தேமு அடுத்த வாரம் இறுதி செய்யும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ.6-

17ஆவது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தேசிய முன்னணி அடுத்த வாரம் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தாம் கோத்தா கினபாலுவில் இருக்கும்போது அவ்விவகாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

வரும் சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள கிட்டத்தட்ட 80 விழுக்காடு புதிய முகங்களைக் கொண்ட வேட்பாளர்களை தேமு நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அம்னோ தலைவருமான டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் கூறினார்.

பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டன. 95 விழுக்காடு நிறைவடைந்து விட்டது என்று நான் கூறுவேன். அடுத்த வாரம் நான் கோத்தா கினபாலுக்கு செல்லும்போது நான் அறிவிப்பேன்." என்றார். புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் பி.ஐ.சி.சி.யில் நடைபெற்ற புத்ராஜெயா எப்ஓஐ தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *