ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேமுவுக்கு ஜசெக உதவும்!

- Muthu Kumar
- 17 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 17-
பேராக்கின் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு உதவுவதற்காக தனது கட்சி தேர்தல் கேந்திரத்தை ஜசெக முடுக்கிவிடும் என்று, ஜசெக தலைமைச் செயலாளர் லோக்
சியூ ஃபூக் கூறியுள்ளார்.மத்திய அரசாங்கத்தை அமைத்திருக்கும் ஒவ்வோர் அரசியல் கூட்டணிக்கும் இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“இது எங்களுக்கு வழக்கமாகி விட்டது. ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் போட்டியிடும் எந்த ஓர் இடைத் தேர்தலிலும் நாங்கள் உதவுவோம்.“இதற்கு முன்னர் நடந்த கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின்போது எங்களுக்கு அவர்கள்
உதவியதுபோல், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் அவர்களுக்கு நாங்கள் உதவுவோம்" என்று, ஷா ஆலமில் நேற்று பேரவையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, போக்குவரத்து அமைச்சருமான லோக் தெரிவித்தார்.
வாக்காளர்களிடம் முன்கூட்டியே தம்மை அறிமுகம் செய்து கொள்வதற்கு ஏதுவாக, ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் தேமு வேட்பாளர் ஏப்ரல் மாதத் துவக்கத்தில் அறிவிக்கப்பட விருப்பதாக அண்மையில் கூறப்பட்டது.பினாங்கில் உள்ள பண்டாராயா அரங்கில் நடந்த ஒரு காற்பந்தாட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த பிறகு, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஸ்ஷாம் ஷாருடின் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடைபெற விருக்கிறது.
Jelutong akan menggerakkan pusat pilihan rayanya bagi membantu calon Barisan Nasional dalam pilihan raya kecil DUN Ayer Kuning. Setiausaha Agungnya, Loke Siew Fook, menyatakan ini adalah amalan biasa dalam kerajaan perpaduan, seperti sokongan sebelumnya di pilihan raya kecil lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *