எரிபொருள் விலை உயர்வு: எதிர்ப்பு பேரணியில் கூட அழைப்பு - டத்தோ இப்ராஹிம் அலி
- Surendran Sumdraraj
- 02 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 2-
புத்ரா கட்சியின் தலைவர் டத்தோ இப்ராஹிம் அலி, எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) கோலாலம்பூரில் உள்ள சோகோ முன்பு நடைபெறும் இந்த பொதுக்கூட்டம், சாதாரண ஒன்று அல்ல; மக்களின் குரலை வெளிப்படுத்தும் முக்கிய தருணம் என அவர் குறிப்பிட்டார்.
“ஏப்ரல் 5 என்பது ஒரு பொதுக்கூட்டம் மட்டுமல்ல. இன்னும் சுயமரியாதையுடன் நிற்கும் மக்களுக்கும், குரல் இன்றி வாழும் நிலையை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் இடையிலான ஒரு எல்லைக் கோடு,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், எரிபொருள் விலை உயர்வு மக்கள் வாழ்க்கைச் செலவினை அதிகரித்து வருவதாகவும், இதற்கு எதிராக பொதுமக்கள் ஒன்றுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



