கருத்துக்கணிப்பால் அலட்சியம் வேண்டாம்; இறுதிவரை கடுமையாக உழைக்க வேண்டும் – முகமது ஹாசான்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
தஞ்சோங் பியாய், ஜூலை 7 –
ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) 40 முதல் 42 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று சில ஆய்வு நிறுவனங்கள், குறிப்பாக மெர்டேக்கா சென்டர் வெளியிட்டுள்ள கணிப்புகளால் தேர்தல் இயந்திரம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கணிப்புகளைக் காரணமாகக் கொண்டு பிரச்சாரப் பணிகளைக் குறைக்காமல், வாக்குப்பதிவு நாள் வரை மக்களைத் தொடர்ந்து சந்தித்து ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“மெர்டேக்கா சென்டர் உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் எங்கள் தேர்தல் இயந்திரத்தினருக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது. தொடர்ந்து உழையுங்கள். வாக்காளர்களைச் சந்தியுங்கள். நமது ஆதரவாளர்கள் அனைவரும் அதிகாலையிலேயே வாக்களிக்க வருவதை உறுதி செய்யுங்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும், 15-ஆஆவது பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே ஜொகூரிலும் பாரிசான் நேஷனல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதைவிட அதிக இடங்களை வெல்ல முடிந்தால் அது வரவேற்கத்தக்கது என்றும் முகமது ஹாசான் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



