சுங்கச் சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைக்கு வாய்ப்பில்லை! – பொதுப்பணி அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 29, 

தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட சுங்கச் சாவடிகளை ஒழிப்பு என்பது என்பது எளிதான காரியம் அல்ல என பொதுப்பணி அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார். நெடுஞ்சாலைகளின் பராமரிப்புச் செலவுகளுக்காக மட்டுமே சுங்கச் சாவடிகளின் கட்டணம் பயன்படுத்தப்படுவதாக நினைக்க வேண்டாம், நெடுஞ்சாலை பயணர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சுங்கச் சாவடிக் கட்டணங்கள் பயன்படுத்தப்படுவதாக Datuk Seri Alexander Nanta Linggi விளக்கமளித்தார். தற்போதைய சூழலில் சுங்கச் சாவடிகளின் வருமானத்தைக் கொண்டு பராமரிப்புகள் மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. மேலதிகமான பயணர்களின் தேவைகளுக்கு அரசாங்கத்தின் மற்ற வருமான நிதிகளைப் பயன்படுத்துவதாக Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார்.

உதாரணமாக நெடுஞ்சாலையைப் பயந்படுத்தும் வாகனங்கள் விபத்துக்குள்ளானாலும் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்விடங்களைப் பராமரிக்கவும், ஊழியர்களுக்கான ஊதியம் போன்ற பல்வேறு முக்கிய செலவுகளை ஈடுகட்ட அரசு நிதியைப் பயன்படுத்துவதாக Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார். அதே வேளையில் தற்போது 10 நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்திருப்பது மக்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்பதையும் Datuk Seri Alexander Nanta Linggi சுட்டிக்காட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *