டி.ஏ.பியின் தோனி புவாக்கு எதிராகக் காவல்நிலையத்தில் 59 புகார்கள்!
- THINAGAREN SANGGAREN
- 21 May, 2026
மே 21,
டி.ஏ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான TONY PUA-க்கு எதிராக 59 புகார்களை காவல்துறை பெற்றுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார். சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராகச் சமூகவலைத்தளத்தில் கருத்து வெளியிட்டதாக டாமான்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகச் சிலாங்கூரில் எல்லா மாவட்டக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சிலாங்கூர் காவல் துறை விசாரணையைத் தொடங்கியிருப்பதாக Datuk Shazeli Kahar தெரிவித்தார்.
டி.ஏ.பியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ருக்குன் நெகாராவை உள்வாங்கியிருக்க வேண்டும் என்றும் அரசு இறையாண்மையைப் பின்பற்றும்படி சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியதற்கு எதிராக டி.ஏ.பி கட்சியின் தோனி புவா கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக 3R குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக நடவடிக்கைகளைக் காவல்துறை மேற்கொள்ளும் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



