தலைவர்களை தாக்குவதை விட்டுவிட்டு நீதிமன்ற வழக்குகளில் கவனம் வையுங்கள்-வான் சைபுலுக்கு வலியுறுத்தல்!
- Muthu Kumar
- 01 Oct, 2025
கோலாலம்பூர், அக். 1-
வான் சைபுல் தலைவர்களை தாக்குவதை விட்டுவிட்டு தம் மீதான நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என சிலாங்கூர் மாநிலத்தின் பெர்சத்து கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் கட்சித் தலைவர்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தாக்கக் கூடாது.
அதற்குப் பதிலாக நீதிமன்ற வழக்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.எஸ்டி எனும் சத்திய பிரமாணம் மூலம் பொசத்து
தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை வீழ்த்துவதற்கான தீய சதியின் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகக் கூறப்படுகிறது.
இதனால் தான் பல தலைவர்களுடன் நேற்று வான் சைபுல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
இதில் அவர்களின் ஒரு கூட்டு அறிக்கை கண்டிக்கத்தக்கது. மாறாக, கவனத்திற்கு உரியது அவரது சொந்த வழக்கு,வான் சைபுல் விசாரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான ரிங்கிட் மோசடி செய்ததற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளார்.இந்த வழக்கு, அதிகாரிகளுக்கு உறுதியான அடிப்படை இருப்பதை நிரூபிக்கிறது.
மேலும் அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மற்றவர்களைத் தாக்குவதற்குப் பதிலாக நீதிமன்றத்தில் தம் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



