ரவூப்பில் புயல்! - பல வீடுகள் சேதம்?!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், அக் 7: நேற்று பிற்பகல் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் புயலைத் தொடர்ந்து ரௌப்பின் பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன.

பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட புயல், கம்போங் மெலாயு செம்பாலிட், தாமான் அமலினா லெஸ்டாரி மற்றும் ஜாலான் லிபிஸ் ஆகிய இடங்களில் உள்ள எட்டு வீடுகளை பாதித்ததாக ரௌப் சிவில் பாதுகாப்புப் படை (ஏபிஎம்) அதிகாரி கேப்டன் (பிஏ) சமசுதீன் கம்படே தெரிவித்தார்.

பலத்த காற்று வீடுகளின் கூரைகள், படுக்கையறைகள் மற்றும் சமையலறைகளை சேதப்படுத்தியதாகவும், சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இரவு 10 மணி நிலவரப்படி, எட்டு வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரௌப் ஏபிஎம் தகவல் பெறவும், உணவுப் பெட்டிகளை வழங்கவும், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாக அவர் இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், குவாந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி அஷாரி அபு சாமா, மாலை 6 மணி முதல் பெய்த கனமழையால் தாமான் பெருமஹான் கலிங், காம்பாங் கலிங் மற்றும் ஜாலான் ஸ்டேடியம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்தார்.

நிலைமையைக் கண்காணிக்க குவாந்தான் காவல் நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்ததாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *