சுற்றுலா துறையின் தலைவராக டத்தோக் மனோகரன் நியமனம்! - Datuk Manoharan Periasamy!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 11,

தேசிய சுற்றுலா துறையான Tourism Malaysiaவின் தலைவராக வரலாற்றில்  முதல் முறையாக மலேசிய இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கும் Datuk Manoharan Periasamy பொறுப்பேற்றார். உண்மை இந்த பொறுப்பு டத்தோக் மனோகரனுக்குக் கடந்த டிசம்பர் 8 ஆம் நாள் வழங்கப்பட்டதாகச் சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Datuk Seri Tiong King Sing தெரிவித்தார். அடுத்த ஆண்டு மலேசியாவின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் மிக பெரிய எதிர்பார்ப்பைத் தாம் கொண்டிருப்பதாகவும் டத்தோக் மனோகரன் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வார் என்றும் அமைச்சர் Datuk Seri Tiong King Sing தெரிவித்தார்.

இந்த நியமனத்தின் மூலமாக என் மீது சுற்றுலா கலை கலாச்சார அமைச்சகம் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என்றும் குறிப்பாக TMM2026-இல் மலேசியாவின் சுற்றுலா ஆணையத்தை அனைத்துலக அளவில் முதன்மைப்படுத்துவேன் என்றும் அதேவேளையில் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளையும் ஊக்குவிப்பதாகவும் Datuk Manoharan Periasamy நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்துலகச் சுற்றுலா துறை மேம்பாட்டு நிறுவனங்களின் இயக்குநராகவும் சுற்றுலா தளங்கள் மேம்பாடு, சுற்றுலா தளங்களின் நிர்வாகத்துவம் என சுற்றுலா துறையின் அனைத்து இலாகாவிலும் அனுபவம் வாய்ந்தவராக டத்தோக் மனோகரன் பெரியசாமி திகழ்கிறார். குறிப்பாக 2000 முதல் 2016 வரையில் மலேசியாவுடனான இந்தியாவின் மும்பை சுற்றுலா ஆணையத்தின் இயக்குநராகவும் அதன்பின்னர் டெல்லி சுற்றுலா ஆணையத்தின் இயக்குநராகவும் Datuk Manoharan Periasamy பதவி வகித்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *