கள்ளக் குடியேறிகளுடன் குடிநுழைவுத் துறை அதிகாரி கைது!
- THINAGAREN SANGGAREN
- 26 Apr, 2026
ஏப்ரல் 26,
சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களை மலேசியாவுக்குள் அனுமதித்ததாக நம்பப்படும் குடிநுழைவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரியுடன் தொடர்பில் இருந்த 9 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
தேசிய எல்லையான கெடா குடிநுழைவுத் துறையின் மூலமாக மலேசியாவுக்குள் வெளிநாட்டினர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைவதாக உளவுத் துறையின் தகவல் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட குடிநுழைவு அதிகாரியைப் பிந்தொடர்ந்து நேற்று பிற்பகல் வெளிநாட்டினர்களுடன் அவர் கைது செய்யப்பட்டதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
கைது செய்யட்டவர்களின் ஒருவர் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்படும் TOYU எனும் தாய்லாந்து நாட்டு ஆடவர் என்றும் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர், பாக்கிஸ்தானைச் சேர்ந்த இருவர் தாய்லாந்தைச் சேர்ந்த மேலும் ஒருவருடன் குடிநுழைவுத் துறையின் மூத்த அதிகாரியும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



