தியோ பெங் ஹோக் மரணம் எஸ்பிஆர்எமுக்கு பெரிய பாடம்: அசாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD

2009ஆம் ஆண்டு நிகழ்ந்த தியோ பெங் ஹோக் மரணச் சம்பவம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் (SPRM) அமைப்பிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் பாடமாகவும் அமைந்தது என்று அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்துள்ளார்.

எஸ்பிஆர்எம் வெளியிட்ட “Kolar Hitam Bukan Sekadar Operasi” என்ற யூடியூப் போட்காஸ்டில் பேசிய அவர், அந்த சம்பவம் அமைப்பின் அலட்சியத்தை உணர்த்திய முக்கிய தருணமாக இருந்ததாகக் கூறினார்.

“நேர்மையாக சொல்கிறேன். தியோ பெங் ஹோக் மரணம் எங்களை அலட்சியத்திலிருந்து விழிப்புணர்வுக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு எங்கள் அமைப்பின் நற்பெயரையும் மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது,” என்றார்.

மேலும், அப்போது எஸ்பிஆர்எம் தலைவராக இருந்த Tan Sri Abu Kassim Mohamed தலைமையில் அமைப்பின் செயல்முறைகளில் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அசாம் பாக்கி தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு சிலாங்கூர் அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹோக், எஸ்பிஆர்எம் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், எஸ்பிஆர்எம் செயல்முறைகள் குறித்த கேள்விகளும் எழுந்தன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *