சிக்கித் தவித்த மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர் - வெளியுறவு அமைச்சர் Mohamad Hasan!

top-news
FREE WEBSITE AD

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலால் அங்கு சிக்கித் தவித்திருந்த  மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் Mohamad Hasan தெரிவித்துள்ளார். இப்போதைக்கு அந்தப் பகுதிகளில் வசித்து வரும் மலேசியர்களை மேலும் வெளியேற்ற எந்தத் திட்டமும் இல்லை என்றும், அப்பகுதியின் வான்வழி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தாங்களாகவே நாடு திரும்ப முடியும் என்றும் அவர் கூறினார்.

“அப்பகுதி நிலவரத்தை கண்காணிக்கும் பொறுப்பை தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. தேவையானபோது தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அது ஆலோசனை வழங்கும்,” என அவர் நேற்று நடைபெற்ற Forum Ilmuwan Malaysia Madani நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் 8ஆம் தேதி, வெளியுறவு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, West Asia பகுதியில் ஏற்பட்ட மோதலால் 649 மலேசியர்கள் அங்கு சிக்கித் தவித்ததாக கூறப்பட்டது.மார்ச் 11ஆம் தேதி  163 மலேசியர்கள் நாடு திரும்பினர். இவர்களில் Saudi Arabia-வில் உம்ரா பயணத்தில் இருந்தவர்கள் மற்றும் Qatar, Jordan, Syria ஆகிய நாடுகளில் இருந்த மலேசியர்களும் அடங்குவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *