சாலையைக் கடக்கும் போது அந்நிய பெண் மரணம்-மகள் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ்டவுன், அக்.30-

சுங்கை டுவாவிலுள்ள கார் கழுவும் மையத்திற்கு அருகில் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலையைக் கடக்கும் போது எஸ்யூவி வாகனம் ஒன்று மோதியதில் 1 அந்நிய பெண் மரணமுற்ற வேளையில், அவரது மகள் படுகாயமுற்றாள்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் 57 வயதுடைய எஸ்யூவி வாகன ஓட்டுநர் சுங்கை டூவாவிலுள்ள தன் வீட்டிலிருந்து பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை அடைந்ததும் அந்த வாகன ஒட்டுநர் 40 வயதுடைய இப்பெண் மற்றும் 2 வயதுடைய மகளைச் சாலையைக் கடக்கும் போது மோதி விட்டார்.இந்த மோதலினால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்ட வேளையில், படுகாயமுற்ற அவரது மகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.

இதில் எஸ்யூவி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், 41(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. பெண்ணின் சடலம் சவப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் அறிக்கையில் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *