ஆசிரியர்கள் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை! - கல்வி அமைச்சு

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 18: பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர்கள் மீது கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று  கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்று குறிப்பிட்ட அவர்,  எந்தவொரு தவறான நடத்தையிலும், குறிப்பாக பாலியல் குற்றங்களில் எந்த சமரசமும் இருக்காது என்று கூறினார்.

ஜொகூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் சக ஊழியருக்கு ஆபாச தளங்களுக்கான இணைப்புகளை அனுப்பியதாகக் கூறப்படுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஃபத்லினா இவ்வாறு கூறினார்.

32 வயது ஆண் ஆசிரியர் பல பெண் மாணவர்களிடம் இது போன்ற  தகாத முறையில் நடந்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Kementerian Pendidikan akan mengambil tindakan tegas terhadap guru yang terlibat dalam kes salah laku seksual. Menteri Fadhlina Sidek menegaskan tiada kompromi dalam isu ini, susulan kes guru lelaki di Johor yang menghantar pautan lucah kepada rakan sekerja dan ganggu pelajar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *