சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 27: சுமத்ராவின் வடமேற்கு கடற்கரையில் இன்று மதியம் 12.56 மணிக்கு ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சிமியூலுவிலிருந்து தெற்கே 8 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி  57கி.மீ ஆழத்தில் இருந்தது.

தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அது ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *