டிரம்பின் நடனம்! மலேசியாவுக்கு அவமானம்! – முகைதீன் சாடல்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 27,

ஆசியான் மாநாட்டில் விருந்தினராக வந்த அமேரிக்க அதிபர் Donald Trump மலேசியாவிற்கு இஸ்லாமிய வரலாற்று அவமானத்தை நிகழ்த்திவிட்டதாக முன்னாள் பிரதமரும் பெரிக்கத்தான் தலைவருமான TAN SRI MUHYIDDIN YASSIN சாடினார். மலேசியாவுக்கு உலக நாடுகளின் வர்த்தக ஆதரவு வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் ஆசியான் மாநாட்டுக்கு வந்த Donald Trump-க்கு அன்வார் அளித்த முக்கியத்துவம் என்பது அதிகப்படியானது என்றும் அவ்வளவு பெரிய மரியாதைக்குரியவர் அல்ல Donald Trump என முகைதீன் யாசின் தெரிவித்தார்.

இஸ்லாமிய நாடுகள் மீதான Donald Trump நடவடிக்கைகளை அறியாதவரா அன்வார் எனும் கேள்வியை முகைதீன் முன்வைத்துள்ளார். Donald Trump என்பவர் ஒரு நாட்டின் தலைவர். மற்ற நாட்டுத் தலைவர்கள் மலேசியாவுக்கு வந்தால் நாம் எந்த அளவுக்கு மரியாதை வழங்க வேண்டுமோ அந்த அளவிற்கு வழங்கியிருந்தால் போதுமானது. ஆனால் நேற்றும் இன்றும் Donald Trump-க்கு வழங்கப்பட்ட மரியாதை என்பது ஆசியான் மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற நாடுகளின் தலைவர்களை விடவும் அதிகமாக இருந்ததாக முகைதீன் தெரிவித்தார். மலேசிய வரலாற்றில் நேற்றும் இன்றும் Donald Trumpக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் கருப்புப் புள்ளியாகவும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் மலேசியாவுக்கு பெரும் அவமானம் என்றும் முன்னாள் பிரதமரும் பெரிக்கத்தான் தலைவருமான TAN SRI MUHYIDDIN YASSIN கடுமையாகச் சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *