மேலும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை-டிரம்ப்

top-news

வாஷிங்டன், டிச. 17-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான பயணத் தடையை விரிவுபடுத்தி, சிரியா உட்பட ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கும், பாலஸ்தீனிய அதிகாரசபை (PA) வழங்கிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் முழு தடை விதித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்கு வர முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் நீண்டகாலமாக இமிக்ரேஷனை கட்டுப்படுத்த வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்க மக்களை 'அச்சுறுத்தும்' வெளிநாட்டவர்களின் நுழைவைத் தடுப்பதுடன், அமெரிக்காவின் கலாச்சாரம், அரசு, நிறுவனங்கள் அல்லது அடிப்படைக் கொள்கைகளை 'பலவீனப்படுத்தும்' வெளிநாட்டவர்களையும் தடுக்க விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இத்தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *