இது ரமலான் மாதம்! விலகியவர்கள் சேரலாம்! தவறுகள் மன்னிக்கப்படும்! - ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 6: அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் சேரலாம் என்றும், ரமலான் மாதத்தை முன்னிட்டு கடந்த கால தவறுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்றும் அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.

ரமலான் மாதம் முஸ்லிம்கள் தங்களை சிந்தனை செய்யவும், உறவுகளைச் சீரமைக்கவும், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் அழைக்கும் காலமாக இருப்பதால், கட்சியின் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிறந்த வாய்ப்பாக அம்னோ இதைப் பார்க்கிறது என்று அவர் கூறினார்.

இந்த உணர்வில், அம்னோவின் ‘ரூமா பாங்சா’ கதவுகள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் திரும்ப வருவதற்கும், அம்னோவின் போராட்டத்தில் இணைய விரும்பும் அனைவருக்கும் நிபந்தனையின்றி திறந்திருக்கின்றன என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் சேரும் செயல்முறையை அம்னோ துணைத் தலைவர் Khaled Nordin தலைமையிலான ‘ருமா பாங்சா’ பணிக்குழு ஒருங்கிணைக்கும் என்றும் Zahid கூறினார்.

தற்போது பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைத் தலைவர் Hamzah Zainudin உட்பட முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் வரவேற்க கட்சி தயாராக இருப்பதாக சாஹிட் தெரிவித்திருந்தார்.

ருமா பாங்சா’ முயற்சி, தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ அம்னோவில் மீண்டும் சேர விரும்புவோருக்கு திறந்த மேடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

2018ஆம் ஆண்டு Barisan Nasional ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, அம்னோவில் இருந்து பலர் Bersatu கட்சிக்கு தாவியிருந்தனர்.

இந்நிலையில், பெர்சாத்து தலைவர் Muhyiddin Yassin, ஹம்சா  ஜாஹிட்டுடன்  ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயன்றதாக சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான ஹம்சா, தாம் யாரை வேண்டுமானாலும் சந்திக்க உரிமையுள்ளவன் என்றும், முகைதீனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பதிலளித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *