அன்பு காட்டலன்னாலும் பரவாயில்லை அமைதியா இருங்க- ராஷ்மிகா மந்தானா!
- Muthu Kumar
- 10 Aug, 2025
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது நடிப்பால் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பாசத்தை பெற்றவர்.
சமீபத்தில் அவர் நடித்த குபேரா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, மைசா என்ற படத்தில் நடிக்கத் தயாராகி வரும் அவர், ரசிகர்களின் அன்பைப் போலவே டிரோல்களிடமிருந்தும் விடுபடவில்லை. அடிக்கடி அவரை குறிவைத்து விமர்சனங்கள், நகைச்சுவை மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
இந்த டிரோல்கள் குறித்து ஒரு பேட்டியில் தனது மனக்கவலையை வெளிப்படுத்திய ராஷ்மிகா, "நான் உணர்வுபூர்வமான நபர். ஆனால் அதை வெளியில் காட்ட விரும்பவில்லை. அப்படி செய்தால், 'ராஷ்மிகா கேமராவுக்காக நடிக்கிறார்' என்று சிலர் கூறுவார்கள். என்னை எதிர்த்து டிரோல் செய்ய சிலருக்கு பணம் கொடுக்கப்படுகிறது. ஏன் சிலர் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. என் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறார்கள்" என்று கூறினார்.
மேலும், "இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் மீது அன்பு காட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அமைதியாக இருங்கள். தேவையற்ற விமர்சனங்கள், நிந்தனைகள் யாருக்கும் நன்மை தராது" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



