மலாய்காரர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது! - ஏதோ தவறு உள்ளது! - மகாதிர்
- Shan Siva
- 14 Nov, 2025
கோலாலம்பூர், நவ 14: மலாய்க்காரர்களின் ஒற்றுமைக்காக முன்வைக்கப்பட்ட PAYUNG BESAR (Big
Umbrella) கருத்து, எதிர்பார்த்தது போல மலாய்க்கார்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை
ஏற்படுத்துவதை விட பிளவைத்தான் அதிகரிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர்
மகாதீர் முகம்மது தெரிவித்தார்.
இதனைப் பல மலாய்காரர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவற்றைச்
செயல்படுத்தும் தலைவர்கள் பிரிவுபடுத்தும் வகையில் பல்வேறு பெரும் குடைகளை
உருவாக்கி
வருவது பிரச்சனையாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது நான்கு அல்லது ஐந்து
பெரிய “பாயோங் பெசார்” குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், அவை மக்களின்
ஆதரவைப் பெற பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
மக்கள் விருப்பப்படி தேர்வு செய்யும் சூழல் ஏற்பட்டதால்,
மலாய்காரர்கள்
இந்தப் பெரிய குடைகளுக்குள் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கிறார்கள். எனவே, எத்தனை குடைகள் இருந்தாலும் அவை அனைத்தும் நிரம்பவில்லை. பல இடங்கள் காலியாக உள்ளன. இதன் விளைவு மலாய்க்காரர்கள் ஒரே
குடையின் கீழ் இணையும் சாத்தியம் இன்றி இருக்கிறார்கள் என மகாதீர் தனது முகநூல் பதிவில்
தெரிவித்துள்ளார்.
PAYUNG BESAR முன்மொழிவை
நாம் ஏற்றுக்கொண்ட விதத்தில் ஏதோ தவறு உள்ளது. எனவே, மலாய்காரர்கள் ஒன்றாக யோசிக்க வேண்டிய நேரம் இது என்று
அவர் பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



