முன்பு பாஸ் கட்சியுடன் பல கட்சிகள் அனுபவித்த அதே அனுபவத்தை பெர்சத்துவும் சந்திக்கும் நேரம் இது-ரபிசி ரம்லி!
- Muthu Kumar
- 22 Sep, 2025
கோலாலம்பூர்,செப். 22-
முன்பு பாஸ் கட்சியுடன் பல கட்சிகள் அனுபவித்த அதே அனுபவத்தை பெர்சத்துவும் சந்திக்கும் நேரம் இது என முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார்.நிதி தொடர்பாக பாஸ் கட்சிக்கும் பெர்சத்துவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
நம்பிக்கை கூட்டணி காலத்தில் தனது சொந்தக் கட்சியான கெஅடிலானும் அதன் உறுப்பு கட்சியான ஜசெக, பாஸ் கட்சியுடன் இதேபோன்ற அனுபவங்களைக் கொண்டிருந்தன.பாஸ் கட்சியுடன் பணிபுரிந்த அனைவரும் இந்த அனுபவத்தை அனுபவித்திருக்கிறார்கள்.
இப்போது பெர்சத்துக்கான நேரம் இது என்று அவர் சனிக்கிழமை இரவு தனது பிராட்காஸ்ட் ஒலிபரப்பில் கூறினார்.தேர்தல் நிதி விவகாரத்தில் பெர்சத்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, தேசியக் கூட்டணி மீதான தனது கட்சியின் உறுதிப்பாட்டை நேற்று பாஸ் உதவித் தலைவர் இத்ரிஸ் அஹ்மத் வலியுறுத்தினார்.சமீபத்தில் கெடாவில் நடந்த 71ஆவது பாஸ் மாநாட்டின் போது, அதன் தேர்தல் இயக்குநர் சனுசி நோர், பெர்சத்து பாஸ் வசதிகள், தேர்தல் கேந்திரங்களை நம்பியிருப்பதாகக் கூறி கேலி செய்தார்.
இதைத் தொடர்ந்து பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக இருந்தபோது அவருக்கு முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய மாசுக்கி முஹம்மது.15ஆவது பொதுத் தேர்தலுக்கான பாஸ் தேர்தல் செலவுகளை பெர்சத்து ஈடுகட்டியதாகக் கூறினார்.மாசுக்கி உண்மையைச் சொல்லக்கூடும் என்ற தனது நம்பிக்கையை ரபிசி வெளிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



