அதிகாரி மீது தாக்குதல்-சீன நாட்டு மாதுக்கு ஒரு மாதச் சிறை!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஆக. 20-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) கடந்த புதன்கிழமையன்று குடிநுழைவுத்துறை
அதிகாரி ஒருவரைத் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சீனநாட்டு பெண் ஒருவருக்கு சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஒரு மாதச் சிறைத்தண்டனையும் ஈராயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.

நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரால் மாண்டரின் மொழியில் குற்ற பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பிறகு ஃபாங் ஃபூ யுவான் (வயது 31) எனும் அப்பெண்ணுக்கு மாஜிஸ்திரேட் கைராத்துல் அனிசா ஜெலானி அத்தண்டனையை விதித்தார்.

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் நான்காவது தளத்தில் பணியில் இருந்த நோர்டியானா அதிரா ஷாபினாஸ் அப்துல் ரஹ்மான் எனும் குடிநுழைவு அதிகாரியை வேண்டுமென்றே அடித்துக் காயப்படுத்தியதாக ஃபாங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.இம்மாதம் பதின்மூன்றாம் தேதி இரவு 8மணியளவில் அச்சம்பவம் நடைபெற்றது.

தண்டனைச் சட்டம் 332ஆவது பிரிவின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மூன்றாண்டுகள் வரைக்குமான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்க அச்சட்டத்தில் இடமுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *