லக்கேஜில் வைத்து அரிய வகை விலங்குகளைக் கடத்த முயற்சி! KLIA-வில் உள்ளூர் பெண் கைது!
- Shan Siva
- 29 Jul, 2025
சிப்பாங், ஜூலை 29: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) 36 வயது மலேசியப் பெண் ஒருவர், பாதுகாக்கப்பட்ட விலங்குகளை நாட்டிலிருந்து கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
நெகிரி செம்பிலானைச்
சேர்ந்த சந்தேக நபர், நேற்று இரவு 9.10
மணியளவில் KLIA முனையம் 1 இல்
வழக்கமான பொருள்கள் சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
மலேசிய எல்லைக்
கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான MBCA மேற்கொண்ட இந்த ஆய்வில், அவரது லக்கேஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது
விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் இந்தியாவின் ஹைதராபாத் செல்லும் MH0198 என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் இரவு
9.30 மணிக்கு புறப்படவிருந்த பயணி என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து
பாதுகாக்கப்பட்ட உயிரினங்களும், சட்டவிரோதமாக வர்த்தகத்திற்காக
கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளின் மதிப்பு RM127,000 என்று MBCA இன்று தெரிவித்துள்ளது.
வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டம் 2010 [சட்டம் 716] மற்றும் அழிந்து வரும் உயிரினங்களில்
சர்வதேச வர்த்தகச் சட்டம் 2008 [சட்டம் 686] ஆகியவற்றின் கீழ் மேலும் விசாரணைக்காக
அந்தப் பெண் கேஎல்ஐஏ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின்
விமானப் பாதைகள் வழியாக வனவிலங்குகள் கடத்தப்படுவதைத் தடுக்க கேஎல்ஐஏ விமானப்
பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று
எம்பிசிஏ தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



