மக்கள் குடியிருப்புப் பகுதி சுகாதாரம், சுற்றுப் புறத்தூய்மை ஆரோக்கியத்தில் கவனம்!
- Muthu Kumar
- 31 Jul, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
கோல சிலாங்கூர், ஜூலை 31 -
மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போரின் ஆரோக்கியம், சுற்றுப்புறத் தூய்மை, பாதுகாப்பு மற்றும் ஏடிஸ் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் சுகாதாரத்தை பலப்படுத்தும் பணிகளை கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகம் முன்னெடுத்து செயல்படுத்தும் என்று அதன் தலைவர் முகமட் ஹானாஃப்பி பஸ்ரி தெரிவித்தார்.
மாவட்ட சுகாதார இலாகா கோம்பி ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பும் மருந்து தெளிப்பு நடவடிக்கைக் குழுவினருடன் இணைந்து நகராண்மைக் கழக சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும் தங்களது பங்களிப்பை மக்கள் குடியிருப்புப்
பகுதிகளில் செயல்படுத்தி வருவர் என்று அவர் கூறினார்.நேற்று முன்தினம் இங்கு டேவான் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய முகமட் ஹானாஃப்பி மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
மாவட்ட சுகாதார இலாகா இயக்குநர் ஜேஃப்ரி அப்துல் மானாப் நகராண்மைக் கழகம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு பேராதவு வழங்க இசைவு தந்துள்ளதாக அவரது உரையில் குறிப்பிட்டார்.மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள், கோம்பி ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கைக் குழுவினர் என 80 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



