ஆசிரியரை முகத்தில் குத்தியதை மாணவன் ஒப்புக் கொண்டான்!

top-news
FREE WEBSITE AD

காஜாங், ஜூலை 31-

ஆசிரியர் ஒருவரை முகத்தில் குத்திக் காயப்படுத்தியதாக காஜாங் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நேற்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 14 வயது மாணவன் ஒருவன் ஒப்புக் கொண்டான்.மாஜிஸ்டிரேட் ஃபத்தின் டயானா ஜாலில் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அம்மாணவன் அதை ஒப்புக் கொண்டதாக, ஹரியான் மெட்ரோ நேற்று தெரிவித்தது.

கடந்த திங்கள்கிழமை மாலை 4.48 மணிக்கு, 29 வயதுடைய அந்த ஆசிரியரின் முகத்தில் குத்திக் காயப்படுத்தியதாக அந்த ஒன்றாம் படிவ மாணவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அம்மாணவன் பதின்ம வயதுடையவனாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் யாரும் நீதிமன்றத்தினுள் அனுமதிக்கப்படவில்லை
என்று, நீதிமன்றத்திற்கு வெளியில் காத்திருந்த நிருபர்கள் தெரிவித்தனர்.

அம்மாணவனின் பெற்றோர் நீதிமன்றமாணவன் தமது ஒரே மகன் என்றும்  அவன் தம்முடன்தான் வசித்து வருவதாகவும், அம்மாணவனின் 40 வயதுடைய தாய் தெரிவித்தார்.ஆசிரியரின் முகத்தில் குத்தியதற்காக தமது மகன் வருந்துவதாகவும் அவருடன் மன்னிப்புக் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் அரசு தரப்பு மற்றும் தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை செவிமடுத்தப் பின்னர், ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் 1,000 வெள்ளி ஜாமீனில் அம்மாணவனை விடுவித்த மாஜிஸ்டிரேட், தண்டனை விதிப்பதற்கு முன்னர் சமூகநல இலாகாவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெறுவதற்காக இவ்வழக்கை வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *