மெட்ரிகுலேஷனை ரத்து செய்யக் கோரிய விவகாரம்-மாணவர் அமைப்பின் தலைவரிடம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 24-

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தை ரத்துசெய்யக் கோரிய மலாயாப் பல்கலைக்கழக புதிய இளையோர் சங்கத்தின் (யூமானி) தலைவர் தாங் யீ ஸே என்பவரிடம் போலீசார் நேற்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர்.தாங் தம்முடைய வழக்கறிஞர் ஸாயிட் மாலிக்குடன் நேற்று பிற்பகல் 2 மணியளவில் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தை வந்தடைந்தார்.

மெட்ரிகுலேஷனை ரத்து செய்யக்கோரிய விவகாரம் தொடர்பில் தாங்கிடம் பத்தொன்பது கேள்விகளை போலீசார் முன்வைத்தனர் என்று ஸாயிட் கூறினார். யூமானி சார்பில் முன்வைக்கப்பட்ட அக்கோரிக்கை முற்றிலும் கல்வி சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும்.

இத்தகைய பரிந்துரைகள் அனைத்தும் வரவேற்கக் கூடியவை. ஒரு விஷயத்தை ஒருவர் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. அது குற்றமா என்பதுதான் எனது கேள்வியாகும். தாய்மொழிப் பள்ளிகளை மூடும்படி அம்னோ தலைவர்களும் இதர நபர்களும் அடிக்கடி கோரிக்கை விடுத்திருப்பதை எதில் சேர்த்துக் கொள்வது என்றும் ஸாயிட் வினவினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *