மலேசிய இந்து சங்கம் டெம்ப்ளர் வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் மாணவன் தேவேந்திரனுக்கு மடிக்கணினி!

top-news
FREE WEBSITE AD

(வீ.இராஜேந்திரன்)

சிரம்பான், அக். 30-

அண்மையில் மலேசிய இந்து சங்கம் டெம்ப்ளர் வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் தலைவர் ஸ்ரீமதி கவிதா மாரிமுத்து மற்றும் செயலவை உறுப்பினர் தேவி இருவரும் கோலாலம்பூர், யுனித்தாரில் டிப்ளோமா கல்வி பயிலும் மாணவர் தேவேந்திரன் த/பெ மகேந்திரன் என்ற மாணவனுக்கு மடிக்கணினி ஒன்று வழங்கினர். இம்மாணவன் தன் தாயார் நிர்மலாதேவியின் அரவணைப்பில் புக்கிட் பெர்லியன் டெம்ப்ளரில் வசிக்கிறார். இக்குடும்பத்தின் சூழ்நிலையையும் மாணவரின் கல்வி தேவையையும் புரிந்துகொண்டு, டெம்ப்ளர்
வட்டாரப் பேரவை உதவ முடிவு செய்ததாக தெரிவித்தனர்.

இந்த ஊக்குவிப்பின் செயல் நமது சமூகத்திற்குள் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலிக்கிறது. இவ்வேளையில் இம்மாணவனுக்கு மடி கணினி வழங்கிய “நெக்ஸ்ஜென் ரிசோர்சஸ்" நிறுவனத்தின் அதிகாரி விஜயகுமாரன் மற்றும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மாணவன் தேவேந்திரனின் குடும்பத்தார் நன்றி கூறினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *