மாணவி கொலை விவகாரம் - 14 மாணவன் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Shan Siva
- 22 Oct, 2025
கோலாலம் பூர், அக் 22: 16 வயது மாணவி கொலை தொடர்பாக, பண்டார் உத்தாமா
இடைநிலைப்பள்ளியின் 14 வயது மாணவர்
மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அம்மாணவர் கொலை புரிந்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டது.
கொலைக்கான
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 14 ஆம் தேதி காலை 9.20 மணி முதல் காலை 9.35 மணி வரை பண்டார் உத்தாமாவில் உள்ள பள்ளியின் பெண்கள்
கழிப்பறையில் 16 வயது பள்ளித்
தோழியை கத்தியால் குத்தியதாக அந்த மாணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் காலை 8.30 மணியளவில் போலீஸ் வேனில் வந்தார். கட்டிட லாபியில் காத்திருந்த ஊடக உறுப்பினர்களைத் தவிர்த்து, மாற்றுப் பாதை வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



