மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை; ஆசிரியர் மறுப்பு!
- Muthu Kumar
- 06 Aug, 2025
கோத்தா பாரு. ஆக. 6-
கடந்தாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் 11 வயது மாணவனைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஒருவர், நேற்று
கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் காரில் இருந்தபோது இரண்டு செயல்களையும், அதே ஆண்டு மே மாதம் பந்தாய் சஹாயா பூலான் விடுதியில் உள்ள கழிப்பறையில் மேலும் இரண்டு செயல்களை புரிந்ததாக, 51 வயதான ஷாரில் ஃபைசா சக்காரியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் செக்ஷன் 14 (பி), செக்ஷன் 14 மற்றும் செக்ஷன் 16இன் கீழ் அந்நான்கு குற்றங்களும் பதிவாகியுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
அனைத்து குற்றத்திற்கும் 30,000 ரிங்கிட் ஜாமீன் தொகை நிர்ணயித்து, ஷாரில் ஃபைசாவை விடுவிக்க, நீதிபதி சுல்ஃகிப்ளி அப்லா அனுமதியளித்தார்.இரு மாதங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடுவதோடு, வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவரை அணுகவோ துன்புறுத்தவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. ஆவணங்களைச் சமர்ப்பிக்க, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



