2024ஆம் ஆண்டில் எஸ்.பி.எம் முடித்த மாணவர்கள் மெட்ரிகுலேஷன் விண்ணப்பங்களை சரிபார்க்கலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 22-

2025/ 2026ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இணையும் விண்ணப்பத்திற்கான முடிவுகளை நேற்று காலை மணி 10 தொடங்கி மாணவர்கள் சரிபார்க்கலாம்.

2024ஆம் ஆண்டில் எஸ்.பி.எம் முடித்த மாணவர்கள் matrikulasi.moe.gov.my என்ற அகப்பக்கத்தின் வழி தங்களது விண்ணப்பங்களைச் சரிபார்க்கலாம் என்று கல்வி அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இணையம் வழியான பதிவு இன்று முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில், சம்பந்தப்பட்ட மெட்ரிகுலேஷன் கல்லூரி வலைத்தளங்கள் வழியாக திறந்திருக்கும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வியைத் தொடர்வதற்கான கடிதங்களின் அடிப்படையில், ஜூன் 22ஆம் தேதி தொடங்கி மெட்ரிகுலேஷன் கல்லூரியில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

அதில் இணைவதற்கான வாய்ப்பை பெறாத மாணவர்கள். இன்று தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரையில் அதற்கான மேல்முறையீட்டை இணையம் வழி மேற்கொள்ளலாம்.அதற்கான முடிவு ஜூன் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Keputusan kemasukan Program Matrikulasi KPM 2025/2026 boleh disemak mulai 22 Mei. Pendaftaran dalam talian dibuka hingga 21 Jun. Rayuan dibenarkan dalam tempoh sama dan keputusan diumumkan pada 30 Jun. Pendaftaran fizikal bermula 22 Jun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *