ஆசிரியரை முகத்தில் குத்திய மாணவன் ஜாமீனில் விடுவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 2-

தாம் கல்வி கற்கும் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் முகத்தில் வேண்டுமென்றே குத்திக் காயப்படுத்தியதை ஒப்புக் கொண்ட 14 வயது மாணவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.

திங்கள்கிழமை இதன் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்ற பின்னர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் ஒருவரின் உத்தரவாதத்துடன் 1,000 வெள்ளி ஜாமீனில் அம்மாணவனை விடுவித்தது.அந்த ஜாமீன் தொகையை அம்மாணவனின் பெற்றோர் செலுத்தியதாக, அவன் சார்பில் ஆஜராகி இருக்கும் வழக்கறிஞர் எஸ். பிரியலதா தெரிவித்தார்.

பதின்மவயதுடைய காரணத்தினால் அந்த ஒன்றாம் படிவ மாணவனின் பெயர் வெளியிடப்படவில்லை.அவன் மீது சமூகநல இலாகாவினால் சமூகநல மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அதன் தொடர்பான அறிக்கை பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மாஜிஸ்டிரேட் ஃபத்தின் டயானா ஜாலில் உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4.48 மணிக்கு, 29 வயதுடைய அந்த ஆசிரியரின் முகத்தில் குத்திக் காயப்படுத்தியதாக அம்மாணவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் அவன் அதை ஒப்புக் கொண்டான்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *