எந்திரவியல் கல்வியைப் பயில்வதன் மூலம் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் வளமாகும்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், ஆக.3

எந்திரவியல் கல்வியைக் கற்றறிந்து தேர்ச்சி பெறுவதன் மூலம் நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கித் தருவதோடு 'ரோபோட்டிக்' எனும் இந்தப் புதிய கல்வி அணுகுமுறை அவர்களின் வாழ்க்கையை வளமாக்கும் என்று செந்தமிழ்ச்செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

புதியதொரு கல்வித் தடத்தில் நாடு பயணித்துக்/கொண்டிருக்கும் இந்த வேளையில்,தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் எந்திரவியல் கல்வி அறிமுகம் நிச்சயம் அவர்களுக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதால் இந்தக் கல்வியை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆசிரியர்கள் தத்தம் மாணவர்களுக்குப் பின்னர் சரியான முறையில் போதிப்பதன் மூலம் வருங்காலங்களில் நல்ல பலனை அடைய முடியும் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார்.

மாதா பிதா குரு தெய்வம் எனும் முதுமொழிக்கு ஒப்ப எந்திரவியல் கல்வியை போதிக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களால் மாணவர்கள் தக்கதொரு வேலையை இதன்வழி பெற்று உயர முடியும் என்று ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

நேற்று மதியம் இங்கு ஜூக்ரா தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் மலேசிய மக்கள் நலச் சேவைக் கழகம் நடத்திய தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற எந்திரவியல் கல்விக் கருத்தரங்கை நிறைவு செய்து வாழ்த்துரை வழங்கிய அவர் மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார். தமிழ் மாணவர்களின் எதிர்காலம் நலனுக்கு எந்திரவியல் கல்வி பெருந்துணை புரியும் என்று அவரது உரையில் குறிப்பிட்டார்.

சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த ஓம்ஸ் பா.தியாகராஜனுக்கு, கோலாலம்பூர் தொழில் நுட்ப க்கல்லூரி வெக்கேஷனல் பயிற்சி அதிகாரி கணேசன் முருகேசு நினைவுப்பரிசு வழங்கி அவரை வரவேற்றார்.நாட்டில் திரெங்கானு கிளந்தான் இரு மாநிலங்களைத் தவிர்த்து 9 மாநிலங்களில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எந்திரவியல் புதிய அணுகுமுறைக் கல்வியைக் கற்றறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைப் படிப்படியாக செய்து வருவதாக கணேசன் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார். மலேசிய மக்கள் நலச் சேவைக் கழகம் இதற்கான நடவடிக்கைகளையும் முழுமையான செலவுகளையும் ஏற்றுக் கொண்டு நாடு தழுவிய அளவில் அதற்கான பணிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

எந்திரவியல் கல்வித் திட்டத்தில் ஏறக்குறைய 170 தமிழ்ப்பள்ளிகள் முதல் கட்ட நடவடிக்கையாக பங்கேற்க விருப்பதாக அவர் தெரிவித்தார். இங்கு நடைபெற்ற நான்காவது கருத்தரங்கில் 19 தமிழாசிரியர்கள் பங்கேற்றதாக கணேசன் தெரிவித்தார். எந்திரவியல் கல்வி தமிழ் மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தரு தரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *