தீர்ப்பு எழுதும்போது சமூக யதார்தை கருத்தில் கொள்ள வேண்டும் – தலைமை நீதிபதி
- Tamil Malar (Reporter)
- 09 Dec, 2025
ஷா அலாம், டிச. 9-
நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ ஸ்ரீ வான் அகமது பரிட் வான் சாலே, ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதும்போது கோட்பாட்டு அழகு மட்டுமல்ல, அது நிஜ வாழ்கையில் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதையும் சமூகத்தின் மீதான தாக்கத்தையும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
“கோட்பாட்டில் முழுமையானதாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அமலாக்க முடியாத அல்லது பொது மக்களால் புரிந்து கொள்ள முடியாத தீர்ப்பு ஒரு தோல்வியாகவே பார்க்கப்படும்,” என்று அவர் கூறினார்.
“தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்பது பழமொழி. அதைப் போலவே, கோட்பாட்டில் மட்டும் இருக்கும் நீதியும் உண்மையில் நீதி இல்லை,” என்று தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
இன்று ஷா அலாமில் உள்ள UiTM-யின் ஸ்ரீ புடிமான் அரங்கில், யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாரா (UiTM) சட்டப் புலம் ஏற்பாடு செய்திருந்த “2025-ஆம் ஆண்டுக்கான நீதித்துறை சிறப்பு சொற்பொழிவு” நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



