“எல்லையைத் தகர்க்க முடியாத கோட்டையாக மாற்றுங்கள்” – ராணுவத்திற்கு Kim Jong Un உத்தரவு
- Surendran Sumdraraj
- 19 May, 2026
Kim Jong Un, நாட்டின் எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், “எல்லையைத் தகர்க்க முடியாத கோட்டையாக மாற்ற வேண்டும்” என்று இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
North Korea இராணுவ அதிகாரிகளுடன் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு ராணுவ நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு கட்டமைப்புகள், கண்காணிப்பு மற்றும் ஆயுதத் தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக இரு கொரியாக்களையும் பிரிக்கும் இராணுவமயமற்ற மண்டலம் (DMZ) அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை ஊடுருவலைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



