TURUN ANWAR பேரணியில் அன்வாரின் உருவப் பொம்மையைச் சாட்டையால் அடித்த கும்பல்!
- Thinagaren Sanggaren
- 28 Jul, 2025
ஜூலை 28,
கடந்த சனிக்கிழமை தலைநகரில் பிரதமர் அன்வாருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர் அன்வாரின் உருவப் பொம்மையை சாட்டையால் அடித்த கும்பலின் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Mohamed Usuf Jan Mohamad தெரிவித்தார். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் தலைநகர் JALAN MASJID சாலையிலிருந்து அன்வாரின் உருவப் பொம்மையைக் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் காணொலியில் உள்ள உருவப் பொம்மையும் கண்டெடுக்கப்பட்ட உருவப் பொம்மையும் ஒரே மாதிரி இருப்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் Datuk Mohamed Usuf Jan Mohamad தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட காணொலியின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர்களைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Mohamed Usuf Jan Mohamad உறுதியளித்தார். இது தொடர்பாக இதுவரையில் 4 வெவ்வேறு புகார்களைக் காவல்துறை பெற்றிருப்பதாகவும் பேரணியின் போது பிரதானச் சாலைகளில் இச்சம்பவம் நடக்காமல் சாலையின் பின் புறத்தில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக நம்பப்படுவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Mohamed Usuf Jan Mohamad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



