TURUN ANWAR போராட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை! – அன்வார் வருத்தம்!
- Thinagaren Sanggaren
- 26 Jul, 2025
ஜூலை 26,
தலைநகரில் நடைபெற்று வரும் TURUN ANWAR போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் தாம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இன்று தெரிவித்தார். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் என்னை அழைத்தால் நான் வருவேன், ஆனால் இன்றைய போராட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கபடவில்லை என்பது வருத்தமாகவும் இருப்பதாக Datuk Seri Anwar Ibrahim செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாக இருந்தாலும் மக்கள்
ஒன்றுக்கூடும் ஒரு நிகழ்ச்சியாகவே இந்த பேரணியைத் தாம் கருதுவதாக அன்வார் தெரிவித்தார்.
இந்த பேரணி எந்தவொரு சலசலப்பும் இல்லாமல் சுமூகமாக நிறைவு பெற வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக
Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். பேரணியில் நடத்தப்படும் அனைத்து செயல்பாடுகளையும்
தாம் கண்காணித்து வருவதாகவும், பேரணி வெற்றிப் பெற தன்னுடைய வாழ்த்தையும் பிரதமர் Datuk
Seri Anwar Ibrahim தெரிவித்துக் கொண்டார்.
தலைநகரின் 16 இடங்களிலிருந்து பேரணியைத் தொடங்கும் மக்கள் டத்தாரான் மெர்டேக்காவில்
ஒன்றிணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



