பொதுமன்னிப்பிற்காகக் கையேந்திய அன்வார்! – மகாதீர் சாடல்!
- Thinagaren Sanggaren
- 26 Jul, 2025
ஜூலை 26,
TURUN ANWAR போராட்டம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதால் அன்வார் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இன்று நடைபெற்ற TURUN ANWAR பேரணியில் தெரிவித்தார். சட்டத்தை மீறியிருப்பது அன்வார். நீதித்துறையில் பிரதமரும் ஆட்சியாளர்களும் தலையிடக்கூடாது எனும் சட்டத்தை மீறியது அன்வார் என்றும் மகாதீர் தெரிவித்தார். அன்வார் நீதிபதி அல்ல, அன்வார் என்னை மன்னிக்கிறாராம். ஆனால் நான் மன்னிப்பே கேட்கவில்லை என மகாதீர் தெரிவித்தார்.
மகாதீர் தவறு செய்திருப்பதாகச் சொல்லும் அன்வார், அதை நிரூபிக்க முடியுமா? அப்படியானால் அன்வார் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால் அன்வார் நீதிமன்றம் செல்லமாட்டார். அன்வாரே நீதியை வழங்கிடுவார் என மகாதீர் கடுமையாக விமர்சித்தார். அன்வாரின் ஆட்சியில் தான மலாய்க்காரர்கள் முழுமையாக ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மலாய்க்காரர்கள் உணர வேண்டும் என்றும் மீண்டும் தேர்தலின் போது அன்வார் மலாய்க்காரர்களுக்காக நான் இருக்கிறேன் என மேடைகளில் முழக்கமிடுவார். அதையெல்லாம் மலாய்க்காரர்கள் நம்ப வேண்டாம் என மகாதீர் தெரிவித்தார்.
இந்த TURUN ANWAR பேரணிக்குப் பின்னர் காவல்துறை என்னை விசாரிக்கலாம். காவல்துறையின் கைதுக்குப் பயந்து பொதுமன்னிப்பிற்காக நான் கையேந்தமாட்டேன். என்னை விசாரிக்கும் காவல்துறை நாளை உங்களையும் விசாரிக்கும். துணிந்து சொல்லுங்கள் மக்களே, மகாதீர் தான் உங்களுடன் இருக்கிறார் என்று. அன்வாரைப் போல மன்னிப்புக் கேட்க வேண்டாம் என மகாதீர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



