TVET மூலமாக வாழ்நாள் முழுவதும் நன்மை உள்ளது! – துணைப் பிரதமர் நம்பிக்கை!
- Thinagaren Sanggaren
- 22 Oct, 2025
அக்தோபர் 22,
இன்று அனைத்துலகத் திறன் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாகக் கோலாலம்பூரில் தொடங்கியது. திவெட் மூலமாக வாழ்நாள் முழுவதுமாக நன்மை உள்ளது என துணை பிரதமர் ZAHID HAMIDI நம்பிக்கை தெரிவித்தார். TVET கல்வியால் தொழில் சந்தைக்கு மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்திற்கும் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என ZAHID HAMIDI தெரிவித்தார் TVET தொழில்கல்வி இல்லாமல் SMART CITY உருவாக்கத்திற்கு வாய்ப்பில்லை என்றும் ZAHID HAMIDI நினைவூட்டினார்.
TVET தொழில்கல்வியின் அடுத்தக்கட்ட நகர்வாக பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தவிருப்பதாகவும் உலக நாடுகளின் பங்களிப்பும் TVET தொழில்கல்வியை அனைத்து தரப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் என ZAHID HAMIDI தெரிவித்தார். புதுமைகளை நோக்கி உலகம் பயணிக்கிறது. அப்படியான புதுமைகளுக்கு TVET முக்கிய பங்கை வகிப்பதாக ZAHID HAMIDI நம்பிக்கை அளித்தார். மலேசியா TVET கல்வியின் மூலமாக நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கவிருப்பதாகவும் மக்களிடையே தொழில்கல்விக்கான விழிப்புணர்வை மேம்படுத்த முடியும் என ZAHID HAMIDI தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



