விஜய் பாதுகாப்பை மீறினால் கடுமையான நடவடிக்கை! – சிலாங்கூர் அரசு எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 14 Dec, 2025
டிசம்பர் 14,
நடிகரும் அரசியல்வாதியுமான தளபதி விஜய் மலேசியாவில் நடத்தவிருக்கும் கலைநிகழ்ச்சியில் பாதுகாப்பு அம்சங்கள் கடுமையாக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்றும் விஜயின் கரூர் கூட்டத்தில் 40 பேர் பலியான சம்பவத்தைச் சிலாங்கூர் அரசு இன்னும் மறக்கவில்லை என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் PAPPARAIDU தெரிவித்தார். கரூரில் 40 பேர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணமாக அதன் பாதுகாப்பு விதி மீறல்கள் என்பதையும் சிலாங்கூர் அரசு உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மலேசியாவில் நடைபெறவிருக்கும் நடிகர் விஜயின் கலைநிகழ்ச்சியில் பாதுகாப்புகள் அதிகரிக்க வேண்டும் என PAPPARAIDU ஏற்பாட்டுக்குழுவிற்கு நினைவூட்டினார்.
மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது. குறிப்பாக மலேசியாவில் இப்படி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என PAPPARAIDU தெரிவித்தார். விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல. அரசியல்வாதியாகவும் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை உணர்ந்து ஏற்பாட்டுக்குழு முறையான திட்டமிடலுடன் திறைமையான ஒழுக்கமான நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என PAPPARAIDU கலைநிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுவிற்கு நினைவூட்டினார். அரசாங்கம் பாதுகாப்பை வழங்குவதில் முழு கவனத்துடன் ஈடுபடும் என்பதால் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என PAPPARAIDU முன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



