அன்று வேறு; இன்று வேறு! UEC குறித்து அன்வார்
- Shan Siva
- 16 May, 2026
ஈப்போ, மே 16: ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழான UEC அங்கீகாரம் குறித்து பல தசாப்தங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கவில்லை; காரணம் கல்வி முறைகளில் இருந்த வேறுபாடுகள்தான் என பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
சீன சுயாட்சி பள்ளிகளின் கல்வி முறை மற்றும் தேசிய கல்வி முறை இடையிலான வித்தியாசங்கள் கொள்கை மோதல்களை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
இன்று பேராக்கில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் தின விழா தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை பல தசாப்தங்களாக விவாதிக்க முயன்றதாகவும், தாம் கல்வி அமைச்சராக இருந்தபோதும், சீன சுயாட்சி பள்ளிகளின் கல்வி முறை நமது கல்வி முறையிலிருந்து மாறுபட்டதால் முன்னேற்றம் கடினமாக இருந்தது என்றும்கூறினார்.
அப்போது ஆசிரியர் அமைப்புத் தலைவர்களுடன் நடந்த சந்திப்புகளில், அவர்கள் மலாய் மொழியில்கூட பேச விரும்பவில்லை. அது 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
ஆனால் தற்போது நடைபெறும் சந்திப்புகளில் அனைத்து சங்க பிரதிநிதிகளும் மலாய் மொழியில் பேசுகின்றனர் என்றார்.
மேலும், சீன சுயாட்சி பள்ளிகளில் SPM தேர்வு எழுதிய மாணவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மலாய் மொழியில் பேச முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை கொள்கை ரீதியாக UEC-ஐ அரசு பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான தகுதியாக அங்கீகரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கான நிபந்தனையாக மாணவர்கள் SPM தேர்வில் மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



