தைப்பூச ரதத்தை உற்சாகத்துடன் வரவேற்ற பினாங்கு கவர்னர்!
- Thinagaren Sanggaren
- 01 Feb, 2026
பிப்ரவரி 1,
பினாங்கு தைப்பூசத்தில் பினாங்கு மாநிலக் கவர்னர் Tun Dato' Seri Utama Haji. Ramli Ngah Talib குடும்பத்துடன் பங்கேற்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. Tun Dato' Seri Utama Haji. Ramli Ngah Talib அவர்தம் துணைவியார் Toh Puan Raja Dato’ Seri Utama Noora Ashikin உடன் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கவர்னரின் இல்லத்தைக் கடந்த ரதத்தைப் பார்வையிட்ட போது தன்னை விடவும் தன் பேரப்பிள்ளைகள் அதிக உற்சாகம் அடைந்ததாகவும் அவர்களுக்குத் தைப்பூசக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரத ஊர்வலத்தைக் காண்பிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் பினாங்கு கவர்னர் தெரிவித்தார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் தைப்பூசம் போன்ற சமய நிகழ்ச்சிகள் நம்மையும் கடந்து உற்சாகத்தையும் சமூகங்களுக்கிடையிலானப் பிணக்கத்தை அதிகரித்துள்ளது. என் அடுத்த தலைமுறை சமூக நல்லிணக்கத்தோடு வளர்வதையே நான் விரும்புகிறேன். அதே போல தைப்பூச ரத ஊர்வலத்தை அவர்கள் வியந்து பார்த்து ரசித்தது மட்டுமின்றி தைப்பூசம் குறித்தும் அவர்கள் பல தகவல்களைத் தேடி வியந்ததாகப் பினாங்கு மாநிலக் கவர்னர் Tun Dato' Seri Utama Haji. Ramli Ngah Talib தெரிவித்துள்ளார்.
பினாங்கு தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசம் விமரிசையாகவும் அதே வேளையில் ஒழுங்கான முறையிலும் கொண்டாடப்பட்டு வருவதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார். கடந்த 3 நாள்களாகப் பாதுகாப்புப் பணியில் 1,028 காவல் அதிகாரிகள் 24 மணிநேரமும் ஈடுபட்டு வரும் நிலையில் எந்தவோர் அசம்பாவிதங்களும் பதிவுச் செய்யப்படவில்லை என Datuk Azizee Ismail தெரிவித்தார்.
இதுவரையில் 200,000 பக்தர்கள் பினாங்கு தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி கோயிலில் சூழ்ந்திருந்தாலும் இந்த எண்ணிக்கை 500,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார். வெளிநாட்டினர்களும் உள்ளூர்வாசிகளும் அதிகமாகச் சூழ்ந்தாலும் நிலைமையைக் கோயில் நிர்வாகமும் காவல்துறையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் பக்தர்கள் எந்தவோர் அச்சமும் இல்லாது கோயிலுக்கு வந்து செல்லலாம் என பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizee Ismail நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



