ஐக்கிய அரபு வான்வழி தற்காலிக மூடல் – சிக்கிய பயணிகளின் செலவுகளை அரசு ஏற்கும்
- Surendran Sumdraraj
- 03 Mar, 2026
துபாய், மார்ச் 3-
General Civil Aviation Authority (ஜிசிஏஏ) அறிவிப்பின்படி, United Arab Emirates அரசு, நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் சிக்கியுள்ள அனைத்து சுற்றுலா பயணிகளின் உணவு மற்றும் தங்கும் செலவுகளை முழுமையாக ஏற்கும்.
ஐக்கிய அரபு வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டதையடுத்து, நாட்டிற்கு வருவான மற்றும் நாட்டை விட்டு புறப்படவிருந்த அனைத்து விமான சேவைகளும் சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, பல பயணிகள் தங்களது முதன்மை திட்டத்தை மீறி துபாயில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜிசிஏஏ தெரிவித்ததாவது, தற்போதைய சூழ்நிலை நீடிக்கும் காலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மற்றும் சிக்கியுள்ள பயணிகளுக்கான தங்கும் வசதி மற்றும் தேவையான சேவைகளின் செலவுகளை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.
மேலும், இந்த இடைக்கால செயல்பாட்டு மாற்றங்களின் போது அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தடையின்றி வழங்கப்படுவதை நாடு உறுதி செய்யும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



