குவந்தான் விமான விபத்து - காரணத்தைக் கண்டறிய பிரதமர் உத்தரவு
- Shan Siva
- 22 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 22: நேற்று இரவு அரச மலேசிய விமானப்படையைச் சேர்ந்த
RMAF F/A-18D ஹார்னெட் போர்
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடத்துமாறு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தேவையான அனைத்து
பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அவர்
வலியுறுத்தினார்.
சம்பவத்தில்
தொடர்புடைய RMAF விமானி மற்றும் துணை விமானிக்கு அன்வார் தனது
அனுதாபத்தைத் தெரிவித்தார். அவர்கள் விரைவாக
குணமடையவும், அவர்களின் சிகிச்சை சீராக நடைபெறவும்
பிரார்த்தனை செய்வதாக அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



